லக்னோ, ஜன.21- குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, லக்னோவின் சின்னமான கடிகார கோபுரத்தில் ஆயி ரக்கணக்கான பெண்கள் போராட்டம் நடத்திய நிலை யில், அவர்களில் கவிஞர் முனவர் ராணாவின் மகள் கள் - சுமையா ராணா மற் றும் பௌசியா ராணா உட் பட 100 பெண்கள் மீது உத் தரப்பிரதேச பாஜக அரசு வழக்கு பதிவு செய்துள் ளது. 147, 145, 188, 283 ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.