அகமதாபாத், செப். 9 - குஜராத்தில் பிரமாண்ட சர்தார் வல்ல பாய் படேலின் சிலைக்கு அருகே கட்டப்பட்டிருந்த 30 அடி உயர டைனோசர் சிலை சரிந்து விழுந்தது. குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டத் தில் உலகிலேயே உயரமான சிலையான ‘ஒற்றுமையின் சிலை’ என்ற பெயரில் சர்தார் வல்லபாய் படேலின் 182 மீட்டர் உயரம் கொண்ட சிலை அமைக்கப் பட்டுள்ளது. இதனை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இங்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், படகு சவாரி உட்பட பல வசதிகளை கொண்டு வர அரசு திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வல்ல பாய் படேலின் சிலைக்கு அருகே 2 கோடி ரூபாய் செலவில் 30 அடி உயரம் கொண்ட டைனோசர் சிலை அமைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சிலை ஞாயிறன்று சரிந்து விழுந்துள்ளது இதில் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.