tamilnadu

img

புதிய கல்விக் கொள்கையை கண்டித்து பாலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சேலம், அக். 2 - மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை கண்டித்து சேலத்தில் தமிழ்நாடு பாலர் சங்கத்தினர் கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கையை கண்டித்து சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியம், சந்தியூர், ஆட்டையாம்பட்டி, அம்மாபாளையம், மோகன் நகர் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு பாலர் சங்கத்தின் தலை மையில் குழந்தைகள் காந்தி வேடம் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

. மேலும், புதிய கல்விக் கொள்கையின் அபாயங்களை விளக்கும் விழிப்புணர்வு துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் வழங்கினர்.