tamilnadu

img

உண்டு, உறைவிட பள்ளியில் அறிவியல் கண்காட்சி

ஏற்காடு, ஜன.9-  ஏற்காட்டில் உள்ள  உண்டு உறைவிட பள்ளியில் அறிவியல் கண்காட்சி வியாழ னன்று நடைபெற்றது. சேலம் மாவட்டம், ஏற்காடு கஸ்தூரி பாய் காந்தி பாலிகா வித்யாலயா உண்டு,  உறைவிட பள்ளியில் அறிவியல் கண் காட்சி நடைபெற்றது. ஏற்காடு அரசினர் பள்ளி தலைமையாசிரியர் மாலதி ரிப்பன் வெட்டி கண்காட்சி அரங்கை திறந்து வைத்தார். உண்டு, உறைவிட பள்ளி மேற் பார்வையாளர் வைத்தியப்பன், பெற் றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் புகழேந்தி,  அன்னை வேளாங்கண்ணி பள்ளி தாளாளர் ரோஷன் டிகோஸ்டா உள்ளிட்டோர் தலைமையில் கண்காட்சி துவங்கியது. இக்கண்காட்சியில் பள்ளி மாணவிகள்  இயற்கை உரம் தயாரிப்பது, பால்வழி அண்டம், பாரம்பரிய உணவுகள், போக்கு வரத்து வழிமுறைகள், அமில மழை  பொழிவு, மாசு கட்டுப்பாடு உள்ளிட்ட நடைமுறைகளை காட்சிக்கு வைத்தி ருந்தனர். இந்த கண்காட்சியை அரசினர் மேல்நிலை பள்ளி மற்றும் அன்னை வேளாங்கண்ணி பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர்.

;