tamilnadu

மறுவாழ்வு மையத்தில் இளைஞர் மரணம்: உரிய விசாரணை நடத்த வேண்டும் சிபிஎம் மத்தியசென்னை மாவட்டக்குழு வலியுறுத்தல்

 சென்னை, ஜூன் 12- மறுவாழ்வு மையத்தில் இளைஞர் மர்ம்மான முறையில் இறந்தது தொடர் பாக உரிய விசாரணை நடத்தவேண்டும்  என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின்  மத்திய சென்னைமாவட்டச் செய லாளர் ஜி.செல்வா வலியுறுத்தி யுள்ளார்.

இதுகுறித்து மாநில மனநல இயக்குநர் மருத்துவர் மீ.மலையப்பனி டம்  அவர் அளித்துள்ள மனுவின் சாராம் சம் வருமாறு:  

 எழும்பூர் சட்டமன்ற தொகுதி, 77வது  வார்டு, புளியந்தோப்பு கே.பி.பார்க்  தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு, 8வது பிளாக், வீட்டு எண்,357-இல் வசித்து வந்த ஆதிதிராவிடர் வகுப்பை சார்ந்த வசந்தகுமார் (36) என்பவர் சென்னை வானகரம், செட்டியார் அகரம் பிரதான சாலையில் செயல்பட்டு வரும் ஃபீனிக்ஸ் குடிபோதை மறுவாழ்வு மையத்தில் அவரது குடும்பத்தினரால் சிகிச்சைக்காக கடந்த மாதம்  9ஆம் தேதி சேர்த்துள்ளனர். அதே மாதம் 27ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு வசந்தகுமாரின் குடும்பத்தாருக்கு மறு வாழ்வு மையத்தில் இருந்து தொலை பேசியில் தொடர்பு கொண்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடனே வரச் சொல்லிவிட்டு மேற்கொண்டு எதுவும் பேசாமல் போனை துண்டித்து விட்டனர். உடனே குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்ற போது வசந்தகுமாரின் உடல் உயிரற்ற சடலமாக வைக்கப்பட்டி ருந்தது. அவரது வாய் மற்றும் உடற்பகுதிகளில் அடித்து துன்புறுத்தி யதற்கான அடையாளங்களும், ரத்த கறைகளும் இருந்துள்ளன. 

எனவே இவரது இறப்பிற்கு காரண மாக அமைந்துள்ள ஃபீனீக்ஸ் குடி போதை மறுவாழ்வு மையத்தை சீல் வைத்து, சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருபவர்க ளுக்கு அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை வழங்குவதை உறுதி படுத்திட வேண்டும். தாய், தந்தையரை இழந்து சகோதர, சகோதரிகளின் அர வணைப்பில் இருந்து வந்த திருமண மாகாத ஆதிதிராவிடர் வகுப்பை சார்ந்த  வசந்தகுமார் மரணத்திற்கு உரிய இழப்பீட்டை அவரது குடும்பத்தி னருக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 தனியார் குடி மற்றும் போதைப் பொருள் மறுவாழ்வு மையங்கள் அரசின் வழிகாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுகின்றனவா என்பதை அரசு தொடர்ந்து கண் காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனை மற்றும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் செயல்பட்டு வரும் குடி மற்றும் போதை ப்பொருள் நீக்கியல் சிகிச்சை பிரிவு குறித்து பொதுமக்களுக்கு தெரியும் வகையில் விரிவான விழிப்புணர்வு மற்றும் விளம்பரத்தை அரசு மேற்கொள்ள வேண்டும். இப்பிரிவில் காலியாக உள்ள மருத்துவர் - செவிலியர் - ஊழியர் காலிபணியிடங்களை உடனடி  நிரப்பப்பட வேண்டும்.

 இவ்வாறு அந்த மனுவில்  வலியுறுத்தப்பட்டுள்ளது.