வியாழன், பிப்ரவரி 25, 2021

tamilnadu

img

வேளாண் மண்டல பாதுகாப்புச் சட்டத்திற்கு வரவேற்பு: மாநில-மாவட்ட கமிட்டிகளில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், அறிஞர்கள் இடம்பெற வேண்டும்

சென்னை:
காவிரி டெல்டா விவசாயப் பகுதிகளை பாதுகாக்க தமிழ்நாடுசட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்டுள்ள தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டத்தை வரவேற்றுள்ள தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இதற்கென்று அமைக்கப்பட்டுள்ள மாநில மற்றும் மாவட்ட கமிட்டிகளில் விவசாய சங்கப் பிரதிநிதிகள், வேளாண்மை மற்றும் பாசனம் தொடர்பான அறிஞர்கள் அதிக அளவில் இடம் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காவிரிப் படுகை மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மாக அறிவிக்க வேண்டும் என்றும், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட வேளாண்மையை, சுற்றுச்சூழலை பாதிக்கக் கூடிய திட்டங்களை தடை செய்ய வேண்டுமென்றும் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிக ளும் தொடர்ந்து போராடி வந்தன. இதனை தொடர்ந்து தமிழக முதல மைச்சர் பிப்ரவரி 9ஆம் தேதி எட்டுமாவட்டங்களை குறிப்பிட்டு பாது காக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். இதற்கான சட்டமும் நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிப்ரவரி 20 அன்று “தமிழ்நாடு பாது காக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டம்” என்ற பெயரில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்என்ற வகையில் ஒரு சட்டப் பாதுகாப்பை இதன் மூலம் உறுதிப் படுத்தியிருப்பதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது.

அதே நேரத்தில், பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதில் திருச்சி மாவட்டத்தி திற்குட்பட்ட காவிரி பாசனப் பகுதிகளான லால்குடி, ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், திருவெறும்பூர், அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட திருமானூர், டி.பழூர், கரூர் மாவட்டம் குளித்தலைஆகிய தாலுக்காக்கள் இணைக்கப் பட்டால்தான் காவிரி டெல்டா பகுதி முழுமையாக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதியாக ஆகும். எனவே மேற்கண்ட பகுதிகளை இணைக்க வேண்டும்.இதற்கென்று அறிவிக்கப்பட்டுள்ள மாநில அளவிலான கமிட்டி, மற்றும்மாவட்ட அளவிலான கமிட்டிகளில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளே மிக அதிக எண்ணிக்கையில் இடம்பெறும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது ஏற்புடையதல்ல. இது ஆளும்கட்சியின் கமிட்டியாக செயல்படவே வழி வகுக்கும். எனவே, விவசாய சங்கப் பிரதிநிதிகள், வேளாண்மை மற்றும் பாசனம் தொடர்பான அறிஞர் பெரு மக்கள் அதிக அளவில் இடம் பெறும் வகையில் இக்கமிட்டி மாற்றி அமைக்கப்பட வேண்டும். விவசாய தொழிலாளர் சங்க பிரதிநிதியும் இதில் இடம் பெறுவது அவசியம் என்பதை வலியுறுத்துகிறோம்.

“பழைய திட்டங்கள் தொடரும்” என்று அறிவித்திருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. காவிரி டெல்டா முழுமையான பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற நோக்கம் முழுமையாக நிறைவேற வேண்டு மென்றால் எண்ணெய், எரிவாயு எடுப்பது உட்பட தடை செய்யப்பட்டு, முழுமையான விவசாய பகுதியாக மாற்றப்பட வேண்டுமென்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே, மேற்குறிப்பிட்ட அம்சங்கள் உட்பட சட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

;