சென்னை, ஏப்.10-சென்னையில் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் ஆகிய நீர்நிலைகளை பராமரிக்கத் தவறியதாக தமிழக பொதுப்பணி துறைக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்தது.மனு மீதான விசாரணையின் போது, அரசு தரப் பில் ஆஜரான வழக்கறிஞர், நீர்நிலைகளை சுத்தப் படுத்துவதற்காக மேற்கொள்ளப் பட்டு வரும் பணிகளை கருத்தில் கொள்ளாமல் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாக வாதிட்டார்.இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும், மனுவுக்கு பதிலளிக்க பசுமைத் தீர்ப்பாயத்துக்கும், வழக்கு தொடர்ந்த ஜவகர்லால் சண்முகத்துக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.