tamilnadu

விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை முக்கிய செய்திகள்

பணி பாதுகாப்பு இல்லை:  உதவிப்பொறியாளர் ராஜினாமா

விழுப்புரம், ஜன. 10- விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சாரத்தில் உள்ளது ஒலக்கூர் வட்டார  வளர்ச்சி அலுவலகம். இங்கு உதவிப் பொறியாளராக பணியாற்றி வருபவர் திரு மணிகண்டன் (35). அந்த வட்டாரத்தில் நடை பெறும் குடிமராமத்து திட்டப் பணிகளுக்கு உதவிப் பொறியாளர் கையூட்டு கேட்பதாக ஒப்பந்ததாரர்கள் தரப்பிலும், பணியே செய்யாதவற்றுக்கு ரசீது தருமாறு சில  ஒப்பந்ததாரர்கள் மிரட்டுவதாக உதவிப்  பொறியாளர் தரப்பிலும் குற்றம்சாட்டப் பட்டது. இதுதொடர்பாக ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 7ஆம்  தேதி பிரச்சனை ஏற்பட்டது. திட்டப் பணி களை மேற்கொள்வதில் உதவிப் பொறி யாளர் முறைகேடாக செயல்படுவதாகக் கூறி,  ஒப்பந்ததாரர்கள் சிலர் ஒன்றிய அலுவ லகத்தை முற்றுகையிட்டனர். விழுப்புரம் உதவி திட்ட இயக்குநர் மகாலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருவேங்கடம், சீதாலட்சுமி ஆகியோர் போராட்டத்தில் ஈடு பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர். அப்போது அங்கு வந்த உதவிப் பொறி யாளர் திருமணிகண்டனை அங்கிருந்த ஒப்பந்ததாரர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அலுவலர்கள் ஒப்பந்ததாரர்களை தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர். இரு  தரப்பு புகார் மனுக்களையும் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி கள் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தன்னைத் தாக்கி பணி செய்ய விடாமல் தடுத்ததாக உதவிப் பொறியாளர் திருமணி கண்டன் ஒலக்கூர் காவல் நிலையத்தில் ஒப்பந்ததாரர்கள் சிலர் மீது புகார் அளித்தார். இதுகுறித்து ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கடந்த வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் திருமணிகண்டன் உரிய பணி பாதுகாப்பில்லாத காரணத்தால், தனது  பணியை ராஜினாமா செய்வதாக வட்டார  வளர்ச்சி அலுவலர் சீதாலட்சுமி, திருவேங்க டம் ஆகியோரிடம் வியாழக்கிழமை கடிதம் அளித்தார். அந்தக் கடிதத்தில் திருமணிகண்டன் கூறி யுள்ளதாவது:  நான் கடந்த 2 ஆண்டுகளாக உதவிப் பொறி யாளராக பணியாற்றி வருகிறேன். கடந்த 7ஆம் தேதி அலுவலகப் பணியிலிருந்த போது,  சில சமூக விரோதிகள் வந்து தகாத வார்த்தை களால் என்னைத் திட்டி தாக்கினர். இதனால்  மன உளைச்சல் அடைந்ததுடன், பணி பாது காப்பில்லாததால், எனது பதவியை ராஜி னாமா செய்கிறேன் என அதில் தெரி வித்துள்ளார். இதுகுறித்து ஊரக வளர்ச்சித்  துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

சிமெண்ட் தரைகளுக்கான  கிருமி நாசினி அறிமுகம்  

சென்னை, ஜன. 10-  லைசால் நிறுவனம் சிமெண்ட் தரைகளுக்கான கிருமி நாசினியை சென்னையில் அறிமுகம் செய்தது. 2011 ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகைக் கணக்கெ டுப்பின்படி, 3 இல் 1 என இந்திய வீடுகளில் சிமெண்ட் தரை உள்ளது. 3 இல் 2 வீடுகள் சிமெண்ட் தரைகளாகக் கொண்ட மிகப்பெரிய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. விரிவான நுகர்வோர் ஆராய்ச்சியின் போது, பெரும்பாலான சிமெண்ட் தரைகளில் பொதுவாகக் காணப்படும் வெள்ளைத் திட்டுகள், கறைகளை அகற்றுவது, இந்திய இல்லத்தரசிகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. கால்சியம் ஹைட்ராக்சைடால் ஆன சிமெண்ட் தரை, காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடுடன் வினைபுரிந்து வெள்ளை நிறத்தில் காணப்படும் கால்சியம் கார்பனேட் உப்பை உருவாக்குகிறது. இந்த உப்பின் எச்சங்கள் சிறிது சிறிதாக சிமெண்ட் தரைகளில் உள்ள துளைகள் மற்றும் பிளவுகளுக்குள் குடியேறி வெள்ளைக் கறைகளை உருவாக்குகின்றன.இந்த உப்புகளைக் கரைக்க இந்த கிருமி நாசினி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக  ஆர்.பி. ஹைஜீன் ஹோம் தெற்காசியா நிறுவனத்தின் நிர்வாகி சுக்லீன் அனேஜா  தெரிவித்தார்.

வார்டு உறுப்பினர் அடித்துக் கொலையா?

திருவண்ணாமலை, ஜன. 10- திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தென்மாதி மங்கலம் பகுதியில்  செங்கம் அடுத்த பிஞ்சூர் கிராம்  சாமந்திபுரம்  கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் நெல் அறுவடை இயந்திரத்தில் இறந்த நிலையில் தொங்கிக் கொண்டிருந்தார்.  அவர் நடந்து முடிந்த உள்ளாட்சிமன்றத் தேர்தலில் வார்டு உறுப்பினராக  தேர்ந்தெடுக்கப்பட்டவர் எனத் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து கடலாடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, துணை தலைவர் பதவிக்காக இந்த கொலை நடைபெற்றதா அல்லது வேறு காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றார்கள். மேலும் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பாஜக பிரமுகர் இல்லத்தில் 600 சவரன் நகை திருட்டு

திருவள்ளூர்,ஜன.10- திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன், பாஜக தேசியக் குழு உறுப்பினராக உள்ளார். அவர் இல்லத் திருமண நிகழ்ச்சிக்காக உறவினர்களுக்கு பத்திரிகை வழங்க ஜன.9 அன்று  இவர் குடும்பத்துடன் வீட்டை பூட்டிக்கொண்டு வெளியூர் சென்றிருந்தார்.  இந்த நிலையில் வழக்கம் போல் இவரது வீட்டு பணிப்பெண் கோலம் போடுவதற்காக வெள்ளியன்று (ஜன.10)  காலை வந்த போது பூட்டிய வீடு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அருகில் சென்று பார்த்தபோது வெளிப்புற கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து கைப்பேசி மூலம் வீட்டு உரிமையாளருக்கு தகவல் கொடுத்துள்ளார்.இதனைத் தொடர்ந்து வீடு திரும்பிய ஜானகிராமன் உள்ளே சென்று பார்த்தபோது வெவ்வேறு அறைகளில் இருந்த மூன்று பீரோக்களை உடைத்து அதில் இருந்த 600 சவரன் நகை மற்றும் ரூ.3லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  உடனடியாக  புகார் அளித்ததின் பேரில் வழக்குப்பதிவு செய்த மீஞ்சூர் காவல் துறையினர் 3 தனிப்படைகளை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

மின் வாரிய துப்புரவு ஊழியர்களுக்கு 4 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை

திருவண்ணாமலை, ஜன. 10– தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகம் மூலமாக 2020 ஆம் ஆண்டு பொங்க லையொட்டி வரும் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி  வரை சென்னை கோயம்  பேடு பேருந்து நிலையத்தி லிருந்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இயக்கப் பட்டு வரும் சில மார்க்க பேருந்துகள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகை யில் பயணிகளின் வசதிக்காக  கோயம்பேடு பேருந்து நிலை யத்திலிருந்து தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு கீழ்கண்டவாறு மாற்றம் செய்து இயக்கப்படவுள்ளது.  இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழக திரு வண்ணாமலை மண்டலம்  சார்பாக வெளியிடப் பட்டுள்ள அறிவிப்பில் சென்னை – திருவண்ணா மலை, வந்தவாசி, போளூர் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்தும், சென்னை – செய்யாறு, ஆரணி பேருந்துகள் பூந்த மல்லி தற்காலி பேருந்து நிலையத்திலிருந்தும் இயக்கப்படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

பொங்கலுக்கு திருவண்ணாமலை பேருந்து வழித்தடத்தில் மாற்றம்

சென்னை, ஜன. 10- சென்னை அண்ணா சாலையில்  மின் வாரிய தலமை அலுவலக வளாகம்  உள்ளது  அங்கு .10மாடி  கட்டிடத்தில் மின்வாரிய தலைமை அலுவலகம்  மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம், உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்படுகின்றன  இவற்றில்  3 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.  வளாகத்தில் சேரும் குப்பை அகற்றுவது, கழிப்பறைகளை சுத்தம் செய்வது போன்ற துப்புரவு பணியில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகிறார்கள். ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள இவர்களுக்கு மாதம் 6500 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர்களுக்கு கடந்த  4 மாதமாக சம்பளம்  வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள் மின் வாரியம் தலைமை அலுவலகத்திலேயே இதுபோன்று சம்பளம் வழங்காதது ஏமாற்றமளிக்கிறது. எனவே அந்த தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கியை உடனே  வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) வலியுறுத்தி உள்ளது.

;