tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

இன்றைய மின்தடை

சென்னை, ஜூலை 7- மின்வாரிய பரா மரிப்பு பணிகள் காரண மாக சென்னை அம்பத்தூர் ஜெ.ஜெ.நகர் தொழிற்பேட்டை, முகப்பேர் கிழக்கு, எழும்பூர், கொத்த வால் சாவடி, மண்ணடி, என்.எஸ்.சி. போஸ் சாலை, வால்டாக்ஸ் சாலை, போரூர் பி.டி.நகர் மெயின் ரோடு, வியாசர் பாடி வி.எஸ்.மணி நகர், கிண்டி ராம்நகர், ஆவடி லட்சுமிபுரம், பல்லா வரம் நாகல்கேணி, ஆழ்வார் திருநகர், சிறுசேரி ஆகிய பகுதிகளில் திங்களன்று (ஜூலை 8) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மென் பொறியாளரிடம் நகை பறிப்பு

சென்னை, ஜூலை 7- சென்னை அசோக் நகரில் மென் பொறியாளரி டம் நகை பறிக்கப்பட்டது குறித்து போலீஸார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையைச் சேர்ந்தவர் ஜெய்சாந்த் (23). மென்பொறியாளரான இவர், சென்னை வடபழனி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இதற்காக வடபழனியில் ஒரு விடுதியில்  தங்கி யுள்ளார்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதி காலை அசோக்நகர் 4வது அவென்யூவில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், ஜெயசாந்த் மோட்டார் சைக்கிள் மீது மோதினர்.

 இதில் ஜெயசாந்த் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததும் 3 பேரும், கீழே விழுந்து கிடந்த அவரை தாக்கி அவர் அணிந்திருந்த 4 சவரன் செயினை  பறித்துக் கொண்டு தப்பியோடினர். இது குறித்து ஜெயசாந்த், அசோக்நகர் காவல் நிலை யத்தில் புகார் அளித்தார்.