tamilnadu

கமல்ஹாசனுக்கு கலைஞர் நாணயம்: முதலமைச்சர் வழங்கினார்

சென்னை,ஆக.25- மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்  கமல்ஹாசனுக்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயத்தை முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக் கிழமை (ஆக.25) நேரில் வழங்கினார்.

இதுகுறித்து கமல்ஹாசன் வெளி யிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், முத்தமிழறி ஞர் கலைஞர் கருணாநிதியின் நூற்றா ண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். முன்னரே ஒப்புக்கொண்ட பணிகளால் அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை.

நவீனத் தமிழகத்தை நிர்மாணித்தவ ரும், இந்திய அரசியலில் மாபெரும் சக்தியாக விளங்கியவரும், வாழ்நாள் முழுவதையும் தமிழுக்காகவும், தமிழர் நலன்களுக்காகவும் அர்ப்பணித்த வர லாற்று நாயகருக்கு சிறப்பான முறையில் நூற்றாண்டு விழா நடத்தி, முத்தாய்ப்பாக நாணயம் வெளியாக பெருமுயற்சி எடுத்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டா லினை அவரது இல்லத்தில் சந்தித்து பாராட்டு தெரிவித்தேன். அவரது வெளி நாட்டுப் பயணம் வெற்றி பெற வாழ்த்தி னேன் எனத் தெரிவித்துள்ளார்.