tamilnadu

img

பிரதமர் 8 முறை வந்தும் தோல்வி

“அந்த கட்சி எவ்வளவு? இந்த கட்சி எவ்வளவு? என புள்ளி விவரங்கள் எடுக்கும் புள்ளி ராஜாவாகி விட்டார் அண்ணாமலை. 2014-இல் இதேபோலத் தான் பாஜக அணியில் பாமக உள்ளிட்ட கட்சிகள் இருந்தன. அந்தத் தேர்தலில் வாங்கிய வாக்குகளை விட, தற்போது பாஜக கூட்டணி வாங்கிய வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளது. இதை ஏன் அண்ணாமலை பேச மறுக்கிறார். பிரதமரை தேர்தல் பிரச்சாரத்துக்கு 8 முறை அழைத்து வந்தனர். ஆனால் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெறவில்லை. எனவே, புள்ளி விவரத்தை வைத்துக் கொண்டு சீன் காட்டுவது தமிழகத்தில் எடுபடாது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயகுமார் பாஜக-வை கடுமையாக சாடியுள்ளார்.

;