தங்கத்தின் விலை ரூ.160 குறைவு
சென்னை, ஜூன் 13- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவர னுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,280 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வியாழக்கிழமை நிலவரப்படி ஒரு கிராம் தங்கத்துக்கு ரூ.20 குறைந்து ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6660 க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.53,280க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச பிளாஸ்டிக் கண்காட்சி சென்னையில் இன்று தொடங்குகிறது
சென்னை, ஜூன் 13- தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில், சர்வதேச பிளாஸ்டிக் கண்காட்சி சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 14) தொடங்குகிறது.
நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் 17 ஆம் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெறும். 2005 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படும் இந்தக் கண்காட்சி, ஆறாவது முறையாக நடைபெறுகிறது. 17,500 சதுரமீட்டர் பரப்பளவில் இந்தியா முழுவதிலும் இருந்து 300 க்கும் மேற்பட்ட காட்சியாளர்கள், சீனாவைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன. இந்நிகழ்வில் 90க்கும் மேற்பட்ட நேரடி விளக்க நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
இந்தக் கண்காட்சியில் இயந்திரங்கள், பொருட்கள், அச்சுகள், வார்ப்புகள், அச்சிடுதல் மாற்றும் இயந்திரங்கள் மற்றும் துணைப்பொருட்களை காட்சிப்படுத்தப்படவுள்ளன. பிளாஸ்டிக் தொழிலை விரிவாக்கம் செய்யவும் அல்லது புதிதாகத் தொடங்கவும் இந்தக் கண்காட்சி உதவும். புதிய திட்ட யோசனைகளை பார்வையாளர்கள் பெறமுடியும். இந்த கண்காட்சியில் பிளாஸ்டிக் சார்ந்த அனைத்தையும் ஒரே இடத்தில் காண முடியும் என்று தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இந்த சர்வதேச நிகழ்வை 40,000-க்கும் அதிகமான பார்வை யாளர்கள் பார்வையிட்டு பயனடைவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. அண்டை மாநிலங்கள் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்தும், இலங்கை, வியட்நாம், மலேசியா, மியான்மர், கென்யா ஆகிய நாடுகளில் இருந்தும் பார்வை யாளர்கள் வரவுள்ளனர்.
சென்னையில் தூர்வாரும் பணி: 125 கி.மீ. நிறைவு
சென்னை, ஜூன் 13- சென்னை மாநகராட்சி எல்லைக்குள் 125 கி.மீ. நீளத் திற்கு மழைநீர் வடிகால் களில் தூர் வாரும் பணிகள் நிறைவடைந்துள்ளன. சென்னை மாநகராட்சி யில் 2 ஆயிரத்து 624 கி.மீ. நீள மழைநீர் வடிகால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இவை ஓட்டேரி நல்லா கால்வாய், கொடுங்கையூர் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய் மற்றும் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் போன்றவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தென் மேற்கு பருவமழையை முன்னிட்டு கடந்த மே 23 முதல் மழைநீர் வடிகால்க ளில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மாநகராட்சி பராமரித்து வரும் 2 ஆயிரத்து 624 மழை நீர் வடிகால்களில் கடந்த ஆண்டு 1,731 கி.மீ. நீளத் திற்கு தூர்வாரப்பட்டு, மழை நீர் இடையூறு இன்றி வழிந் தோடுவது உறுதி செய்யப் பட்டது.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் மழைநீர் வடிகால்களில் நீர் வெளியே றாமல் தேங்கும் இடங்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 724 கி.மீ. நீள மழைநீர் வடிகால்கள் நல்ல நிலையில் இருப்பதும், 1,900 கி.மீ. நீளத்திற்கு தூர் வார வேண்டி இருப்பதும் தெரியவந்துள்ளது.
அதன் படி, வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக தூர் வார திட்டமிடப்பட் டுள்ளது. அதற்காக ஒவ்வொரு மண்டலத்திற் கும் தலா ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 845 கி.மீ. தூரத்திற்கு தூர் வாரும்பணி அனைத்து மண்டலங்களிலும் நடை பெற்று வருகிறது என்றனர்.
சென்னை - புதுச்சேரி தினசரி விமான சேவை
சென்னை, ஜூன் 13- புதுச்சேரியில் இருந்து பெங்களூர் மற்றும் ஹைதராபாத்திற்கு விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலை யில் தற்போது இந்த வரிசையில் சென்னை யும் இணைந்துள்ளது. புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு தினசரி ஐந்து முறை 19 இருக்கைகள் கொண்ட ஒரு சிறிய வகை விமானம் மிகக் குறைந்த கட்டணத்தில் இயக்கப்பட உள்ளது.
வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறை நாட்களில் சென்னை, பெங்களூரு, ஹைதரா பாத் போன்ற நகரங்களில் இருந்து விடு முறையை கொண்டாட புதுச்சேரி நோக்கி சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம் புதுச்சேரியை எந்த பகுதி யில் இருந்தும் சாலை மார்க்கமாக எளிதில் அடைய முடியும் என்பதே. இதுவரை சாலை மார்க்கமாக பயணித்து வந்தவர்கள் இனி மிக மிக குறைந்த கட்டணத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து புதுச்சேரிக்கு விமானத்தில் பறந்து வர முடியும்.
புதுச்சேரியில் இருந்து தற்போது பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்க ளுக்கு விமான சேவை துவங்கப்பட்ட உள்ள நிலையில் தற்போது புதுச்சேரி சென்னை இடையே 19 பயணிகள் பயணிக்கும் வகையில் புதிய விமான சேவை துவங்கப் பட உள்ளது. ஏர் சஃபா எனப்படும் விமான நிறுவனம் புதுச்சேரியில் இருந்து சென்னைக் கும், சென்னையில் இருந்து புதுச்சேரிக்கும் வரும் அக்டோபர் முதல் விமான சேவையை தொடங்க உள்ளது.
சென்னை புதுச்சேரிக்கு தினசரி ஐந்து முறை இயக்கப்பட உள்ள இந்த விமான சேவைக்கு 1,500 ரூபாய்க்கும் குறைவாகவே கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. விமானத்தில் செல்வது இன்று வரை பலரது கனவாக இருக்கும். இந்நிலை யில் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்படால் பலரது கனவு நனவாகும் என்பதில் ஐயமில்லை.
ஏற்கெனவே புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத் மற்றும் பெங்களூருக்கு இண்டிகோ நிறுவனம் ஜூலை முதல் விமான சேவை துவங்க உள்ளதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது நிர்வாக காரணங் களுக்காக அக்டோபர் மாதம் ஒத்திவைக்கப் பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரியில் இருந்து கொச்சி மற்றும் திருப்பதிக்கு இயக்கப்படவிருந்த விமான சேவையும் அக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.