ஸ்ரீநகர்:
பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், இந்திய பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தின் நவ்ஷெரா துறையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக பாகிஸ்தானை சேர்ந்த ஜெயிஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 4 பயங்கரவாதிகள் வெள்ளியன்று சுட்டு கொல்லப்பட்டு, அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.