புதுச்சேரி கடற்கரை காந்திசிலை எதிரில் அறிவியல் இயக்கம் மற்றும் புதுச்சேரி அரசின் அறிவியல் தொழில்நுட்ப மாமன்றம்,அறிவியல் தொழில்நுட்பத் துறையும் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை வான் நோக்கி மூலம் மாணவர்கள் பொதுமக்கள் திரளானோர் கண்டுகளித்தனர்.
சிதம்பரம் நகரை ஒட்டியுள்ள சரஸ்வதி அம்மாள் நகரில் உள்ள மாணவர்கள், இளம் பெண்கள் சூரிய கிரகணத்தை தங்களது வீடுகளில் இருந்தபடியே கண்டுகளித்து மகிழ்ச்சி அடைந்தனர். தமிழக அரசும், அறிவியல் இயக்கங்களும் சிதம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாணவர்களையும் சூரிய கிரகணத்தை பார்ப்பவர்களையும் ஒருங்கிணைத்து பாதுகாப்பு கவசங்களை அளித்து கிரகணத்தை பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.