tamilnadu

img

மானியம் தராத பாஜக அரசு

ப ாஜக ஆளும் ஹரி யானா மாநிலம் கர்னாலைச் சேர்ந்  தவர் ராம்தாஸ் வெளிமாநி லங்களில் நெல் அறுவடை வேலை செய்யும்  கூலித் தொழிலாளியாவார். ராம்தா ஸின் குடும்பம் மிகவும் பாழ டைந்த வீட்டில் வசித்து வரும்  நிலையில், வியாழனன்று அதி காலை ராம்தாஸின் வீட்டின் மேற்கூரை (சிமெண்ட்) திடீ ரென இடிந்து விழ ராம்தாஸின்  மனைவி கமலேஷ், மகள்கள் மனிஷா(13), ராஷி (7), மகன்  ஹிருத்திக் (5) ஆகியோர் இடி பாடுகளுக்குள் புதைந்தனர். அருகில் இருந்தவர்கள் 4 பேரையும் மீட்டு கர்னாலில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிறுவன் ஹிருத்திக் (5) சிகிச்சை பல னின்றி உயிரிழந்தான். மற்ற  3 பேரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்ற னர்.

சம்பவம் நடந்த நாளன்று ராம்தாஸ் வெளி மாநிலத்தில் இருந்ததால் அவர் இந்த விபத்தில் சிக்கவில்லை.

பாஜக அரசின் அலட்சியம்

ராம்தாஸின் வீடு நீண்ட நாட்களாக பாழடைந்த நிலை யில் உள்ளது. இதனால் பிர தான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீட்டை சரி  செய்ய மாநில பாஜக அரசிடம்  பலமுறை ராம்தாஸ் விண்ணப்  பித்தார். ஆனால் ராம்தாஸின்  விண்ணப்பத்தை கண்டு கொள்ளாமல் அரசு அலட்சி யமாக இருந்துள்ளது. மாநில  பாஜக அரசின் இந்த அலட்சி யத்தின் விளைவாக இன்று  ஒரு குடும்பமே இடிபாடு களுக்குள் புதைந்தது மட்டு மல்லாமல் 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.