tamilnadu

img

‘தல இது தபால் தல’ நூல் வெளியீடு

சென்னை, செப். 26 - பாரதி புத்தகாலயம் பதிப்பித்து பத்திரிகையாளர் அருண்குமார் நரசிம்மன் எழுதிய, ‘தல இது தபால் தல’ நூல் வெளியீட்டு விழா புதனன்று (செப்.25) அண்ணா நூற்றாண்டு நூல கத்தில் நடைபெற்றது. வி.ஐ.டி., பல்கலைக்கழக வேந்த ரும், நிறுவனருமான கோ.விசுவநாதன், நூலை வெளியிட்டு பேசுகையில், இது போன்று இன்னொரு புத்தகம் வந்த தாக தெரியவில்லை. கடலுக்கடி யிலும்,  எரிமலைகளிலும்  தபால் நிலை யங்கள் இருந்ததை இந்நூல் குறிப்பிடு கிறது. பொது அறிவு வளர, பத்திரிகை, நூல்கள் வாசிக்க வேண்டும். மாணவ, மாணவியர் இளைஞர் களிடம் வாசிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும். இதற்கு ஆசிரியர்கள் ஒத்து ழைப்பு தேவை. கடிதம் எழுதும் பழக்கம்  பழமையாகிவிட்டது. தபால் தலைகள் குறித்த முழு விவரங்கள், அறிந்திடாத பல தகவல்களை ஆராய்ந்து ஆசிரி யர் இந்நூலை படைத்துள்ளார். இந்நூலை, அனைத்து தரப்பினரும் வாசிப்பது அவசியம்” என்றார். நூலின் முதல் பிரதியை பெற்றுக் கொண்டு பேசிய தமிழக பள்ளி கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், “இந்நூல் 60 பக்கங்களில் 60 செய்தி களை சொல்கிறது. அதிக தபால் நிலை யங்கள் கொண்ட நாடு இந்தியா. தபால் நிலையம், தபால் தலைகள் குறித்து அரிய தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளது என்றார். பள்ளிகளில் புத்தகங்களை அல மாரியில் வைக்காமல், குழந்தைகளிடம் வாசிப்பு ஈர்ப்பை ஏற்படுத்துவது அவ சியம். அண்ணா நூலகத்தில், வார இறுதி நாட்களில், 2 ஆயிரம் பேர் வருகின்றனர். இது புத்தகங்கள் எழுது கிறவர்களுக்கும், வாசிப்பவர்களுக் கும் ஆக்கம், ஊக்கம் ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார். இந்த விழாவில் விஐடி துணைத் தலைவர் செல்வம், மூத்த பத்திரிகை யாளர்கள் ராமசாமி, துரை.ரமேஷ், மருத்துவர் ஐஸ்வர்யா அருண்குமார், பாரதி புத்தகாலயம் பதிப்பாளர் க.நாக ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.