tamilnadu

img

சிபிஎம் மாமன்ற உறுப்பினர் முயற்சிக்கு வெற்றி

சென்னை, ஜூலை 8- சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டு ராமநாதபுரத்தில் சென்னை நடு நிலைப் பள்ளி உள்ளது. இங்கு சுமார் 600 மாணவர்கள் பயில்கின்றனர். தமிழ் நாட்டில் கடந்த ஆண்டு மேலாண்மைக் குழுவால் தேர்வு செய்யப்பட்ட சிறந்த 10 பள்ளிகளில் இந்த பள்ளியும் ஒன்று. சிறந்த 10 தலைமை ஆசிரியர்களில் இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்துசெல்வி தேர்வு செய்யப்பட்டார். அவ ருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.

தலைமை ஆசிரியர் தனக்கு கிடைத்த தொகையை 8ஆம் வகுப்பு  தேசிய சிறப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற 7 மாணவர் கள் கல்வி உதவித்தொகை வழங்கி னார். தனியார் பள்ளியை விட கூடுதல் சிறப்புடன் இருக்கும் இந்த பள்ளிக்கு போதுமான வகுப்பறைகள் இல்லாமல் இருந்தது. 1981இல் கட்டப்பட்ட பழைய கட்டிடத் தில் இயங்கி வந்தது. அடிக்கடி தளம் இடிந்து விழுந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் மாமன்ற உறுப்பினர் ஜெயராமன் தொடர்ந்து மாமன்றத்தில் வலியுறுத்தி வந்தார். இதன் விளைவாக வடக்கு மண்டல துணை ஆணையர் பள்ளியை ஆய்வு செய்தார்.  அதன்பிறகு, பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு, ரூ.1.73 கோடியில் புதிதாக தரை தளம் மற்றும் இரண்டு மேல்தளம் கட்ட அனுமதி வழங்கினார். 

இதன் மூலம் 9 வகுப்பறைகள் கிடைக்கும். அந்த கட்டிடம் கட்டும் வரை தற்காலிகமாக 8 வகுப்பறைகள்  கட்டப்பட்டு மாணவர்கள் அந்த வகுப்பறைக்கு திங்களன்று (ஜூலை 8) மாற்றம் செய்யப்பட்டனர். மாமன்ற உறுப்பினர் நிதி ரூ.20 லட்சத்தில் ஒரு புதிய வகுப்பறையும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தற்காலிக வகுப்பறைகளுக்கு செல்வதை மாமன்ற உறுப்பினர் ஆர்.ெஜயராமன் பார்வையிட்டு வாழ்த்து தெரிவித்தார். அவருடன் தலைமை ஆசிரியர் முத்துசெல்வி, உதவி பொறியாளர் சஞ்சீவி ராவ் ஆகியோர் இருந்தனர்.