ஆட்சியரிடம்
சிபிஎம் வலியுறுத்தல்
தடப்பெரும்பாக்கம் ஓடை ஆக்கிர மிப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், தடபெரு ம்பாக்கம் ஊராட்சியில் வேன்பாக்கம் முதல் கொக்குமேடு வரை மழை நீர் கால்வாய் செல்கிறது. அந்தக்கால் வாய் தடபெரும்பாக்கம் மற்றும் வேன்பாக்கத்தில் நூற்றுக்கனக்கான வீடுகள் மற்றும் எல்என்ஜி கல்லூரி பகுதிகளிலிருந்து மழைக்காலங்களில் திரளும் நீரை இக்கால்வாய் மூலம் வெளியேறுகின்றனர். இந்தக்கால்வாய் தொடங்கும் இடத்திலிருந்து, முடிவு பெறும் இடம் வரை ஆக்கிரமித்துள்ளனர். ஆக்கிர மிப்பு உள்ள இடத்தில் சுருங்கியும், ஆக்கிரமிப்பு இல்லாத இடங்களில் 100 அடி முதல் 150 அடிமுதல் அகலம் உள்ள பகுதியாக உள்ளது. இப்பகுதி களில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என அனைத்து பகுதி மக்க ளும் போராடி வருகின்றனர். இதை தொடர்ந்து பொன்னேரி வட்டாட்சியர் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்ற வேண்டும். இந்த நிலையில், மீஞ்சூர் பிடிஒ நீண்ட காலமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சூழலில் நீர் ஓடை மற்றும் கால்வாய் பாது காப்பு இயக்கம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் இடைக்கால மாக ஒரு தீர்ப்பினை அளித்து ஆக்கிரமிப்புகளை அகற்றி அதை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தகவல் அளிக்க வருவாய்த்துறைக்கும் இதர எதிர்மனுதாரர்களுக்கும் உத்தர விட்டது. ஆனால் எதிர்மனுதாரர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் 2024 ஆம்ஆண்டு மார்ச்.20 அன்று வழக்கு வந்தபோது எதிர்மனுதாரர்கள் சார்பாக ஆஜரான அரசு தரப்பு வழக்குரைஞர் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருப்பதாகவும் மூன்று நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கியிருப்பதாக தெரி வித்தபோதும் நீதிபதிகள் இறுதி தீர்ப்பினை அளித்து வழக்கை முடித்து வைத்துள்ளனர். நீதிமன்றத்தீர்ப்பின் படி, எதிர்மனுதாரர்கள் வழக்கில் உள்ள தடபெரும்பாக்கம் புல எண் 127 மற்றும் 174 ல் உள்ள வாய்க்கால் பழைய நிலைக்கு கொண்டுவரவேண்டும் என்றும் ஆக்கிரமிப்பு செய்தவர்களை காவல்துறை உதவியுடன் வெளி யேற்றிட வேண்டும் என்றும் தாமதம் செய்யக்கூடாது என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அதிகாரி, பொன்னேரி வட்டாட்சியர் மற்றும் பொன்னேரி சார் ஆட்சியர் ஆக்கிரமிப்பை அகற்றிட சிபிஎம் சார்பிலும் கடிதம் கொடுக்கப்பட்டது. ஆக்கிரமிப்பை அகற்றுவது என்பது கண்துடைப்பாக மட்டும் உள்ளது. வட்டாட்சியராக இருந்த மதி வாணன் 14.03.2024 தேதியிட்டு தனியாக ஒரு வரைபடம் ஒன்றை போட்டு அதன் அடிப்படையில் ஆக்கிர மிப்பை அகற்றிட மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு அளிக்கப் பட்டதை வைத்துக்கொண்டு ஆக்கிர மிப்பு அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது முற்றிலும் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானதாகும். சிலர் ஓடையை மறைக்க கான்கிரீட் தூண்களை எழுப்பி உள்ளனர். இது குறித்து நீர் நிலை மற்றும் ஓடை கால்வாய் பாது காப்பு இயக்க தலைவர் கே.விஜயன் கடந்த ஜன 10 அன்று குறுஞ்செய்தியை வட்டாட்சியருக்கு அனுப்பியுள்ளார். மேலும் மாவட்ட ஆட்சியருக்கு தபால் மூலம் புகார் அனுப்பப்பட்டுள்ளது. சிபிஎம் வலியுறுத்தல் தடப்பெரும்பாக்கம் ஓடை ஆக்கிர மிப்பு விசயத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எந்தவித சமரசமும் இன்றி ஆக்கிரமிப்பு செய்த பகுதிகளை மீட்டு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சிபிஎம் தலைவர்கள் திருவள்ளுர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். இதில் கட்சியின் மாவட்ட செய லாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழுஉறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், கே.ராஜேந்திரன், ஆர்.தமிழரசன், மாவட்ட குழு உறுப்பினர் இ.எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.