tamilnadu

img

தாய்ப்பாலை பாட்டிலில் அடைத்து விற்ற கடைக்கு சீல்

சென்னை, மே 31- சென்னை மாநகரத்தில் சட்டவிரோதமாக  பாட்டில்களில் தாய்ப்பால் விற்ற முத்தையா  என்பவர் கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தாய்ப்பாலை காசுக்கு விற்பனை செய் வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஆன்லைனிலும் தாய்ப்பால் விற்பனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னை மாதவரம் பகுதிக்கு உட்பட்ட கேகேஆர் கார்டன் 1ஆவது தெருவில் முத்தையா என்ப வருக்கு சொந்தமான ‘லைப் வேக்சின் ஸ்டோர்’ என்ற மொத்தம் மற்றும் சில்லறை  விற்பனை மருந்து கடையில், பாட்டில்களில் தாய்ப்பால் அடைத்து விற்பனை செய்யப் படுவதாக திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து அதிகாரி கஸ்தூரி தலைமையில் அந்த கடையில் சோதனை நடத்தினர். சோதனையில் புரதச்சத்து மருந்துகள்  விற்பனை செய்ய மட்டுமே கடைக்கு உரிமம்  பெறப்பட்டுள்ளதும்,  சட்டவிரோதமாக சுமார்  50க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் தாய்ப்பால்கள் அடைக்கப்பட்டு விற்ப னைக்கு வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அங்கிருந்த தாய்ப்பால் நிரப்பப்பட்ட பாட்டில்களை பறிமுதல் செய்து  அரசு ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அந்த கடைக்கு தற்காலிகமாக சீல்  வைத்துள்ளனர். மேலும் அவருக்கு எங்கிருந்து தாய்ப்பால் வந்தது, எப்படி கிடைத்தது? அதை அவர் எப்படி பதப்படுத்தி விற்பனை யில் ஈடுபட்டு வந்தார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தாய்ப்பாலை வணிகரீதியில் விற்பதோ, தாய்ப்பாலில் தயாரித்த பொருட்களை விற்பதோ கூடாது என்று இந்திய உணவு பாது காப்பு அறிவுறுத்தியுள்ளது. வணிக ரீதியில்  தாய்ப்பால், அதை கொண்டு தயாரிக்கப்பட்ட  பொருட்களை விற்பதை நிறுத்த வேண்டும்.

 மேலும், உணவு பாதுகாப்பு சட்ட விதிகளை மீறி தாய்ப்பால் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தாய்ப்பால் விற்கப்படுவோர் மீது மாநில,  ஒன்றிய அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆணையம் அறிவுறுத்தி யுள்ளது.

;