tamilnadu

img

ஸ்டெர்லைட் விவகாரம்: நடிகர் ரஜினிக்கு மீண்டும் சம்மன்...

சென்னை:
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் ஆணையத்தில் ரஜினிகாந்த் வரும் 19ம் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில்  2018 ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம்  விசாரணை நடத்தி வருகிறது.இதுவரை 23 கட்டங்கள் விசாரணை நடைபெற்றுள்ள நிலையில், 24வதுகட்ட விசாரணை தூத்துக்குடி யில் உள்ள விருந்தினர் மாளிகை முகாம் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.விசாரணை ஜனவரி 19 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகர் ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பப் பட்டுள்ளது.ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட் டத்தின் பின்னணியில் சமூக விரோதிகள் இருப்பதாக ரஜினி கூறியிருந்தார். இதுதொடர்பாக அவரிடம் ஆணையம் விசாரணை நடத்த உள்ளது.இதற்கு முன்பு ரஜினிக்கு சம்மன் அனுப்பப்பட்ட போது அவர் நேரில் ஆஜராகவில்லை. ரஜினிகாந்த் நேரில் ஆஜராகாதது குறித்து விசாரணை ஆணையத்தில் விளக் கம் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு நேரில் ஆஜராவதில் இருந்து அப்போதைக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

 

;