tamilnadu

சவீதா பல் மருத்துவக் கல்லூரி டாக்டர் நந்தினி தேவி உலக சாதனை

சிமாட்ஸ் பல்கலைக்கழகத்தின் சவீதா பல் மருத்துவ கல்லூரியில் முதுகலைப் பட்டப் பயிற்சியின் போது, பொது மயக்க மருந்து கொடுத்து 110 பேருக்கும், வலி நிவாரணி மூலம் 132 பேருக்கும் முழு வாய் மறுவாழ்வு சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த முதல் குழந்தை பல் மருத்து வர் என்ற உலக சாதனையை டாக்டர் நந்தினி தேவி படைத் துள்ளார்.  அவருக்கு இக்கல்லூரியின் குழந்தைகள் மற்றும் தடுப்பு பல் மருத்துவத் துறை பாராட்டுகளையும் வாழ்த்துகளை யும் தெரிவித்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை யானது, குழந்தைகளுக்கான பல் மருத்துவத்தின் மிக உயர்ந்த தரத்தை உறுதி செய்வதில் அவரது உயரிய பணி,  மருத்துவ நிபுணத்துவம் மற்றும் இடைவிடாத அர்ப்பணிப் புக்கு சான்றாக உள்ளது என பர்கலை கழக வேந்தர் என்.எம்.வீரையன் கூறினார்.