tamilnadu

ஜூலை 16இல் சசிகலா வழக்கு விசாரணை காணொலி காட்சி மூலம் நடக்கிறது

சென்னை, மே 29-சசிகலா மீதான வழக்குவிசாரணையை ஜூலை 16 ஆம் தேதிக்கு எழும்பூர்நீதிமன்றம் ஒத்திவைத்து ள்ளது.சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் சசிகலா அடைக்கப் பட்டுள்ளார். இதற்கிடையே அவர்மீது அந்நியச் செலாவணி வழக்கு தொடரப் பட்டது. ஜெ.ஜெ. டிவிக்கு வெளிநாட்டில் உபகர ணங்கள் வாங்கியதில் அந்நியச் செலாவணி மோசடி வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் சசிகலா, பாஸ்கரன் நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் மே 2ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த மோசடி தொடர்பாகச் சாட்சிகள் தெரிவித்த விவரங்கள் குறித்து சசிகலா விடம் விளக்கம் கேட்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டது.ஆனால், உடல்நலக் குறைவு காரணமாக நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டு சசிகலா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத் தில் மனுத் தாக்கல் செய்யப் பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சசிகலா காணொலி காட்சி மூலம் ஆஜராக அனுமதி வழங்கியது.ஆனால் சசிகலா ஆஜராகவில்லை. இந்த நிலையில் மே 28அன்று எழும்பூர் நீதி மன்றத்தில் சசிகலா தரப்பில் உயர்நீதிமன்ற உத்தரவு நகல் சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர், சசிகலாவிடம் கேள்விகள் கேட்க ஏதுவாக வழக்கு ஆவணங் களைத் தமிழில் மொழி பெயர்ப்பதற்காக விசார ணையை ஜூலை 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்து எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மலர்மதி உத்தரவிட்டார்.அன்றைய தினம் சசிகலா காணொலி காட்சி மூலமும், பாஸ்கரன் நேரிலும் ஆஜராவதற்கான தேதி முடிவுசெய்யப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.