tamilnadu

ரூ.3 லட்சம் பணம் பறிமுதல்

வேடசந்தூர், ஏப்.10-வேடசந்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ .3 லட்சம் பணத்தை பறக்கும்படையினர் பறிமுதல்செய்து தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வடமதுரை - எரியோடு சாலையில் பறக்கும்படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எரியோடு நோக்கி வந்த ஒரு மோட்டார் சைக்கிளை தடுத்துநிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது பைக்கின் பெட்டியில்ரூ.3 லட்சம் இருந்ததை கண்டுபிடித்தனர். மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த வேடசந்தூர் அருகே உள்ள வரப்பட்டியைச் சேர்ந்த நாகராஜ், உடன் வந்த மதுரை விளாங்குடியைச் சேர்ந்த தீபக் ஆகியோரிடம் விசாரணை நடத்தியபோது டாடா இண்டிகா என்ற தனியார் ஏ.டி.எம்மிற்கு பணம் கொண்டு வந்தது தெரிந்தது. கொண்டு வந்த பணத்திற்கு கணக்கு எதுவும்இல்லை. இதனையடுத்து பறக்கும்படை அதிகாரிகள் பிடிபட்ட2 பேரையும், பறிமுதல் செய்த ர. 3 லட்சம் ரொக்கப்பணத்தையும் வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சுரேஷ்கண்ணன், தேர்தல் நடத்தும் துணை தாசில்தார் பாண்டியராஜன் ஆகியோ ரிடம் ஒப்படைத்தனர். பணம் கொண்டு வந்ததற்கு தகுந்த ஆவணங்களை கொண்டு வந்து காட்டி பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறி இருவரையும் அனுப்பிவிட்டனர்.