சென்னை:
தவணை முறையில் பணத்தை வசூலித்து நிலமாக தருவதாகக் கூறி 1,137 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் அமலாக்கத்துறையினர் டிஸ்க் அசெட்ஸ் லீட் இந்தியா லிமிடெட் என்ற தனியார் நிறுவன நிர்வாகிகள் 4 பேரை கைது செய்துள்ளனர்.டிஸ்க் அசெட்ஸ் லீட் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனம் தவணை முறையில் விவசாய நிலங்களை தருவதாக கூறி விளம்பரம் செய்து 12 லட்சம் வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ.1,100 கோடி வரை பணம் வசூலித்துள்ளது. ஆனால் அறிவித்தபடி நிலத்தை வழங்காமல் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந் ததை தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவு படி, இதனை விசாரிக்க நீதிபதி அக்பர் அலி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
12 லட்சத்து 28 ஆயிரம் வாடிக் கையாளர்களிடம் 1,137 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளதாக நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் சுந்தர் அடங்கிய அமர்வு முன்பு, அக்பர் அலி தலைமையிலான விசாரணை ஆணையம் அறிக்கை அளித்தது.இதேபோல் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப வழங்க ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி பால் வசந்தகுமார் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவினை அமைத்து, நிறுவனத்திற்கு சொந்தமான 3500 ஏக்கர் நிலத்தை விற்று முதலீட்டாளர்களுக்கு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில் நிறுவனத் திற்கு எதிராக செபி விசாரணையை மேற்கொண்டது. அப் போது கூட்டு வணிகம் தொடர்பாக செபியிடம் அனுமதி பெறாததும், விதிகளைத் தவிர்க்க வாடிக்கையாளர் களிடமிருந்து பெறப்படும் பணத்தை மற்றொரு நிறுவனமான டால் மார்கெட்டிங் சொலியூசன் என்ற பெயரில் வசூலித்ததும் தெரியவந்தது.இதேபோல், வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலித்த ரூ.1137 கோடிக்கான கணக்குகளில் நிறுவனத்தின் இயக்குனர் கள் வழங்கியதிற்கும், வங்கியின் கணக்குகளுக்கும் ஏகப்பட்ட முரண்பாடுகளும் கண்டுபிடிக்கப் பட்டதால், டிஸ்க் அசெட்ஸ் லீட் இந்தியா லிமிடெட் நிறுவனத் திற்கு பணம் வசூல் செய்ய செபி தடை விதித்தது.இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு புகார்கள் குவிந்த நிலையில், 2016 ஆம் ஆண்டு பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து உமாசங்கர், ஜனார்த்தனன், அருண்குமார், சரவணகுமார் உள்ளிட்ட இயக்குனர் களை கைது செய்திருந்தனர்.
நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்று வெளியில் இருந்த டிஸ்க் ஆசெட் லிமிடெட் இந்தியா நிறுவன இயக்குனர்கள் மீது அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்தது. வாடிக் கையாளர்களிடம் வசூலித்த ரூ.1137 கோடி பணத்தை அடிப் படையாக வைத்து பல உறவினர்கள் பெயரில் பணத்தை பரிமாற்றம் செய்ததும், சொத்துக் கள் குவித்ததும், நிலம் வாங்கி இருப்பதும், நிலம் வாங்குவதற்கு முன் தொகை கொடுக்கப்பட்டதுமாக பலவிதங்களில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்திருப்பதை அமலாக்கத் துறையினர் விசாரணையில் உறுதி செய்துள்ளனர்.இதனையடுத்து அமலாக்கத் துறையினர் டிஸ்க் ஆசெட் லிமிடெட் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர்கள் உமாசங்கர், அருண்குமார், ஜனார்த்தனன், சரவண குமார் ஆகியோரை கைது செய்துள்ளனர். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் நால் வரையும் ஆஜர்படுத்தி 14 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.