சென்னை, ஜூலை 12- ஆர்.கே. நகரில் 1.77 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை மக்க ளவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி திறந்து வைத்தார்.
வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.1 கோடியே 8 லட்சம் மற்றும் ஐஓசிஎல் சமூக பொறுப்பு நிதி ரூ.69 லட்சம் என மொத்தம் ரூ.1.77 கோடி மதிப்பீட்டில் கட்டப் பட்ட புதிய கட்டிடங்கள் திறப்பு விழா வெள்ளியன்று (ஜூலை 12) நடைபெற்றது.
42ஆவது வார்டு சேனியம்மன் அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள சிபிஎஸ் பள்ளிக்கு ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் உள்ளரங்கம், 38ஆவது வார்டு வினோபா நகர் 1ஆவது தெருவில் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம். அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளுக்கு ரூ.69 லட்ச மதிப்பீட்டில் ஸ்மார்ட் கிளாஸ் ஆகியவற்றை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி திறந்து வைத்தார்.
இதில் சட்டமன்ற உறுப் பினர்கள் ஆர்.டி.சேகர், ஜே.ஜே.எபினேசர், ஆர்.கே. நகர் கிழக்கு பகுதிச் செய லாளர் இரா.லட்சுமணன், மேற்கு பகுதி செயலாளர் எஸ்.ஜெபதாஸ் பாண்டியன், 4ஆவது மண்டலக் குழு தலைவர் நேதாஜி யு.கணே சன், மாமன்ற உறுப்பினர்கள் ரேணுகா, தேவி கதிரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.