tamilnadu

img

கொரோனா உதவித் தொகை வழங்க தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை

கிருஷ்ணகிரி, ஜன.6- கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 333 ஊராட்சிகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பத்தாண்டுகளாக ஒப்பந்ததாரர்கள் மூலம்  ஒப்பந்த தொழிலாளர் களாகவே பணி யாற்றி வரும் இவர்களுக்கு ஊதிய மாக மாதம் ரூபாய் 3500 வழங்கப்படுகிறது. அதுவும் உரிய தேதியில், முறையாக வழங்கு வதில்லை. வேறு எந்த சலுகை களும் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதுமில்லை.  இந்த தொழிலாளர்களில் 20 விழுக்காட்டினர் 58 வயதை நெருங்குபவர்களாக உள்ள னர். ஆனாலும், தூய்மை பணி யாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட கொரோனா ஊக்கத் தொகை 15,000 விழுக்காடு ஒப்பந்த தொழி லாளர்களார்களுக்கு வழங்கப்பட வில்லை. குறிப்பாக கிருஷ்ணகிரி நக ராட்சி, காவேரிப்பட்டினம் பேரூ ராட்சி சுற்று வட்டத்திலும் ஊராட்சி களிலும் பணியாற்றும் 800க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஒரு வருக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது  கொரோனா காலத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தூய்மைப் பணியில் கடுமையாக உழைத்த கிருஷ்ணகிரி காவேரிப்பட்டினம் பகுதியை சேர்ந்த 800க்கும் மேற்பட்டவர் களுக்கும் ஊக்கத்தொகை உடனடி யாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பொங்கல் பரி சாக அனைவருக்கும் 1500 ரூபாய் வழங்க  வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.