சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதிகாலை 5:30 மணி அளவில் உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து 23 ஆம் தேதி அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (புயல் சின்னம்) வலுப்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஈரோடு, விழுப்புரம், கடலூர், அரியலூர், நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, கோவை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.