வாகன ஆய்வாளர்களுக்கு பணி ஆணை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வழங்கினார்
புதுச்சேரி, ஏப்.23- புதுச்சேரி அரசு, போக்குவரத்துத் துறையில் நீண்ட காலமாக காலியாக இருந்த இளநிலைப் பொறியாளர்,உதவி மோட்டார் வாகன ஆய்வாளர் பணி யிடங்களுக்கு நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் வெற்றிப் பெற்ற 10 நபர்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.புதனன்று (ஏப்.23) நடைபெற்ற இந்நிகழ்வில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அரசு செயலர் முத்தம்மா, போக்கு வரத்து துறை ஆணையர் டாக்டர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் உடனி ருந்தனர்.