tamilnadu

img

சாதி, மத ரீதியிலான பரப்புரை: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

சென்னை, ஜூன் 3- சாதி, மத ரீதியிலான பரப்புரை வழக்கில் ஆறு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாதி, மத, மொழி ரீதியாக வாக்கு சேகரிக்கும் நடவடிக்கை யை கண்காணிக்க ஆணையம் அமைக்குமாறு தொடரப்பட்ட வழக்கில் ஆறு வாரங்களில் பதி லளிக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு  பிறப்பித்துள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாய கத் திருவிழாவான இந்திய மக்கள வைத் தேர்தல் ஏப்ரல் 19 அன்று  துவங்கி ஜூன் 1 வரை 7 கட்டங் களாக நடைபெற்று முடிந்துள்ளது.

இந்நிலையில் சாதி, மதம் மற்றும் மொழி ரீதியாக வாக்கு சேக ரிக்கும் நடவடிக்கையை கண்கா ணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய சுதந்திரமான ஆணையம் அமைக்கக் கோரி வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி சேர்ந்த ராஜேஷ் மகிமை தாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். “சாதி, மதம் மற்றும் மொழி ரீதி யாக வாக்கு சேகரிப்பது என்பது ஊழல் நடவடிக்கை என உச்ச நீதி மன்றம் 2017-ஆம் ஆண்டு தீர்ப் பளித்துள்ளது.

அதேபோல் வெறுப்புப் பேச்சுகளை கட்டுப் படுத்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஆனால், தேர்தல் நேரங்களி லும், தேர்தல் அல்லாத நேரங்களி லும் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத, அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத அர சியல் கட்சிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அரசியல் லாபத்திற் காக சாதி, மதம், மொழி ரீதியான வாக்காளர்கள் மத்தியில் பிளவு ஏற்படுத்துகின்றனர்.

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும் கூட அர சியல் கட்சிகள் மக்களை பிரித்தாள் கின்றன. இது அரசியல் சாசனத் திற்கு விரோதமானது. தேர்தல் நேரங் களில் இவ்வாறான பேச்சுக்களை தடுக்க தேர்தல் ஆணையம் நட வடிக்கை எடுத்தாலும், அதன்பிறகு நடவடிக்கை எடுக்க எந்த ஒழுங்கு முறையும் இல்லை.  எனவே, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கள், மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய சுதந்திரமான ஆணை யம் அமைக்க வேண்டும்” என்று மனு வில் வலியுறுத்தப்பட்டு இருந்தது.

இவ்வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன், நீதிபதி முகமது சபீக் அடங்கிய அமர்வு, இந்த மனு தொடர்பாக ஆறு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்துள்ளது. தேர்தல் ஆணையம் அளிக்கும் பதிலைப் பொறுத்து அடுத்த கட்ட  நடவடிக்கையை உயர் நீதிமன்றம் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

;