tamilnadu

img

இனப் படுகொலையை நிகழ்த்தும் நேதன்யாகுவின் நெருங்கிய நண்பராக பிரதமர் மோடி

ஜூன் 4 வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு பத்தாண்டு கால கொடூர பாஜக ஆட்சி முடிவுக்கு வந்து, இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. ஆனால் பாஜக ஊடகங்களைப் பயன்படுத்தி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பு செய்து வருகிறது. பாஜகவின் இந்த கடைசி முயற்சியும் முறியடிக்கப்பட்டு மாற்று ஆட்சி அமையும்.

உலகமே வெட்கித் தலைகுனியக்கூடிய வகையில், அமெரிக்க ஏகாதிபத்திய, ஐரோப்பிய நாடுகளின் ஆதரவோடு இஸ்ரேல், பாலஸ்தீனத்தினத்தில் இனப் படுகொலை செய்து வருகிறது. இதனை கண்டித்து நாடு தழுவிய கண்டன இயக்கத்தை நடத்தி வருகிறோம். கடந்த 8 மாத காலத்தில் 40 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பச்சிளம் குழந்தைகளைக் கூட கொடூரமாக படுகொலை செய்கின்றது. இதற்கெதிராக உலக மக்கள் திரண்டு வருகிறார்கள். இஸ்ரேல் மக்களே போரை நிறுத்த, இனப்படுகொலையை நிறுத்த  வலியுறுத்திப் போராடி வருகின்றனர். இந்த இனப் படுகொலைக்கு காரணமான இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இனப்படுகொலையில் இருந்து பாலஸ்தீன மக்களை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு இந்தியரின் கடமை. இந்த இனப் படுகொலையை நிகழ்த்தும் நேதன்யாகுவின் நெருங்கிய நண்பராக பிரதமர் மோடி உள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இஸ்ரேலுக்கு எதிராக தீர்மானம் வந்தபோது, இந்தியா நடுநிலை வகித்து நேதன்யாகுவை ஆதரித்தது. அதையும் கண்டித்து இந்த போராட்டம் நடைபெறுகிறது.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஜூலை 2 சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதிலிருந்து...

;