tamilnadu

img

தபால் நிலைய சேமிப்புக் கணக்கு: குறைந்தபட்ச தொகை அதிகரிப்பு....

சென்னை:
வங்கிகளில் பணம் சேமிப்பு இருந்தாலும் கிராம புறங்களில் பெரும்பாலானோர் தபால் நிலையங்களில் பணம் சேமித்து வருகின்றனர். திட்டங்களுக்கு ஏற்றவாறு சிறுக சிறுக சேமித்து வருகின்றனர்.இந்த நிலையில், தபால் வங்கி சேமிப்புக் கணக்குகளின் குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.50 ஆக இருந்தது. ஆனால் இதனை மத்திய அரசு ரூ.500 ஆக உயர்த்தி உத்தரவிட்டது.

அதன்படி, இந்த விதிமுறை ஏற்கெனவே நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், சேமிப்புக் கணக்குத் தொடங்கியவர்கள் குறைந்தபட்ச இருப்புத்தொகையை ரூ.500 ஆக உயர்த்திக் கொள்ள டிசம்பர் 11ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப் பட்டுள்ளது.இருப்புத்தொகையை ரூ.500 ஆக உயர்த்தாதபட்சத்தில் வாடிக்கை யாளர்கள் கணக்கில் இருந்து அபராதம் பிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மார்ச் மாதம் முதல் அபராதக் கட்டணமாக வாடிக்கையாளர் கணக்கில் இருந்து ரூ.100 வீதம் ஒவ்வொரு ஆண்டும் கழிக்கப்பட்டு இருப்புத்தொகை குறைக்கப் பட்டு பின்னர், கணக்கு காலாவதி ஆகிவிடும்.எனவே, தபால் அலுவலகங்களின் சேமிப் புக் கணக்கு வைத்துள்ளவர்கள், சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ.500 ஆக உயர்த்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் ஏழை எளிய கிராமப்புற மக்கள் சிறுக சிறுக சேமிக்கும் திட்டத்தையும் மோடி அரசு சீர் குலைத்து விட்டது.