tamilnadu

மெட்ரோ ரயில் நிலையங்களில் ஓவியப்போட்டி

சென்னை, ஜன.25- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னை கலைப்பள்ளியுடன் இணைந்து நடத்தும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்க ளுக்கான ஓவியப்போட்டி வருகிற 2 ஆம் தேதி  காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை  நடைபெறுகிறது. சென்ட்ரல் , எழும்பூர், செனாய் நகர், அண்ணாநகர் கோபுரம், கோயம்பேடு, வடபழனி, அசோக்நகர், பரங்கிமலை, விமான நிலையம், சைதாப்பேட்டை , தேனாம் பேட்டை, ஆயிரம் விளக்கு, அரசினர் தோட்டம், மண்ணடி, வண்ணாரப்பேட்டை ஆகிய 15 மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த போட்டி நடைபெறுகிறது. மெட்ரோ ரயில் அல்லது மெட்ரோ நிலையம் அல்லது மெய்நிகர் உண்மை என்கின்ற தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு மெட்ரோ நிலையத்திலும் 20 சிறந்த ஓவியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றிற்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் அன்று மதியம் 1 மணிக்கு வழங்கப்படும். சிறந்த கலைஞர் விருது 2020 தேர்ந்தெடுக்க, ஒவ்வொரு மெட்ரோ நிலையத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 20  ஓவியங்கள் மெட்ரோ பயணிகள் வாக்களிப் பதற்காக 15 மெட்ரோ நிலையங்களிலும் 3 ஆம் தேதி முதல் வைக்கப்படும். 9 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்ட்ரல் மெட்ரோ வில் நடத்தப்படும் விழாவில் வெற்றியாளர்க ளுக்கு பணமும், சான்றிதழும் வழங்கப்ப டும். சார்ட் பேப்பர் சென்னை கலைப்பள்ளி யால் வழங்கப்படும். மேலும் ஓவியப் போட்டிக்கு தேவையான கலைப் பொருட்களை கொண்டு வருமாறு மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள். போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்கள் பெயர்களை      www.chennaiartschool.com  உடிஅ     என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம். அல்லது வருகிற 29 ஆம் தேதி முதல் 7448822099   என்ற வாட்ஸ்அப் எண் மூலம் பெயர், முகவரி மற்றும் தொடர்பு எண் ஆகியவற்றை பதிவு செய்யலாம். குழு ‘ஏ’ (1 முதல் 3-ம் வகுப்பு), குழு ‘பி’ (4 முதல் 6-ம் வகுப்பு), குழு ‘சி’ (7 முதல் 9-ம் வகுப்பு), குழு ‘டி’ (10 முதல் 12-ம் வகுப்பு), குழு ‘இ’ (கல்லூரி மாணவர்கள்) என 5 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படு கிறது.