வியாழன், ஜனவரி 28, 2021

tamilnadu

img

பொன்பரப்பி தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

பொன்பரப்பியில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதலைக்கண்டித்து இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று காலை பொன்பரப்பியில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபொற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் , திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், திராவிடர்கழகத்தலைவர் கி.வீரமணி, இயக்குநர் கரு.பழனியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் திமுக, சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர். 


;