திங்கள், மார்ச் 1, 2021

tamilnadu

img

ஜனவரி 31ல் போலியோ சொட்டு மருந்து முகாம்

சென்னை, ஜன.28-
தமிழகம் முழுவதும் வருகிற 31ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் என தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
போலியோ இல்லாத நிலையை உருவாக்க ஆண்டுதோறும் நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி மாதத்தில் நடத்தப்படுகிறது. நடப்பாண்டில் ஜனவரி 17ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜனவரி 16ஆம் தேதி தொடங்கியதால் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், நாடுமுழுவதும் போலியோ சொட்டுமருந்து முகாம் வரும் 31ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதில், தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 மையங்களில் 70.20 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்காக, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில், முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

;