tamilnadu

img

அரசுக் கல்லூரி அமைக்க மரங்களை வெட்ட அனுமதி...

சென்னை:
ஊட்டியில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க ஆயிரத்து 838 மரங்களை வெட்டுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.ஊட்டியில் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி அமைக்க மரங்களை வெட்ட அனுமதிக்கக் கூடாது என  கோரி, வழக்கறிஞர் ரமேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதை  விசாரித்த உயர்நீதிமன்றம், மரங் களை வெட்டக்கூடாது என அறிவுறுத்தியிருந்த நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது தமிழக அரசு சார்பில், மருத்துவ கல்லூரி அமைய உள்ள வனப்பகுதியில் உள்ள 25 ஏக்கர் இடத்தில் உள்ள மரங்கள் மட்டுமே வெட்டப் பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அந்த 25 ஏக்கரில் மண் சார்ந்த மரங்கள் ஏதும் இல்லை எனவும் அயல்நாட்டு மரங்களே இருப்பதாகவும் ஆயிரத்து 838 மரங்களில்  90 சதவீதம் தைல மரங்களே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. வெட்டப்படும் மரங்களுக்கு  பதிலாக சேலம் மாவட்டம் வாழப்பாடியில் அரசு மரங்களை நடவுள்ளதாகவும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.அரசின் விளக்கத்தை பதிவு செய்து மரங் களை வெட்டுவதற்கு அனுமதி அளித்த நீதிபதிகள், நீதிமன்றத்தின் ஒப்புதல் பெற்ற பின்னரே மரத் தினை ஏலம் விட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மரங்களை வெட்டியது தொடர்பான புகைப் பட விவரங்களோடு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் மாதம் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.