ஓர் அடிமைக்கு மட்டுமே சமுதாயம் முழுமையையும் புரிந்து கொள்ள முடியும்; ஏனெனில் அவர் தன்னை மட்டுமல்லாது தன் நிலைமைக்குக் காரணத்தையும் புரிந்து கொண்டே ஆக வேண்டும். ஆனால் அவருடைய எஜமான் தன்னைப் பற்றிய புரிதலின் மீது ஆசுவாசமாக அமர்ந்து கொண்டு தன் அடிமையை எப்படிச் சுரண்டுவது என்று எண்ணிக் கொண்டிருந்தால் போதும். இந்தக் குறிப்பிட்ட அம்சத்தின் காரணமாகத்தான் ஒடுக்கப்பட்டவரின் உணர்வு நிலை ஆளுபவர்களின் உணர்வு நிலையை விட சிறந்ததாக இருக்கிறது.
- ஹெகல் -