tamilnadu

img

நிவர் புயல்:7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்-பேருந்துகள் நிறுத்தம்

நிவர் புயல் தீவிரமடைந்து வரும் சூழலில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் பாதிப்பு பகுதிகளில் பேருந்துகள் இயங்காது என்று முதல்வர் தெரிவித்துள்ளார். 
‘நிவர்’ புயல் சென்னைக்கு கிழக்கே சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.  நிவர் புயல் இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும் . நாளை கரையைக் கடக்க உள்ளது. என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் காரைக்கால், மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ‘நிவர்’ புயல் நெருங்கி வரும் நிலையில் கடலூர் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் 7ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக பொதுமக்கள், மீனவர்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

துறைமுகம் வழியாகவோ அல்லது அதன் அருகிலோ புயல் கரையை கடக்கலாம் என்பதே 7ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டதன் விளக்கம் ஆகும் 

மேலும் நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 5-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று 25 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த நிவர், பின்னர் 15 கிலோ மீட்டராக குறைந்தது. இன்று காலை நான்கு கிலோமீட்டர் வேகத்தில் வந்த நிலையில் தற்போது 5 கிலோ மீட்டர் வேகத்தில் நிவர் புயல் நகர்ந்து கொண்டிருக்கிறது. 
இதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இடையேயும் மாவட்டங்களுக்கு உள்ளும் இன்று மதியம் ஒரு மணி முதல் பேருந்து போக்குவரத்து மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்திருந்தார். மேலும் விழுப்புரம் வழியாக செல்லும் திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, குமரிக்கும் அரசு பேருந்துகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

;