tamilnadu

img

புதிய திரைப்படங்கள் வெளியாகாது: தயாரிப்பாளர் சங்கம் தகவல்....

சென்னை:
தமிழகத்தில் திரையரங்குகள் திறந்தாலும் புதிய திரைப்படங்கள் வெளியாகாது என்று தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டன. இதனால் வெளியீட்டிற்கு தயாராக இருந்த படங்கள் கிடப்பில் போடப்பட்டு அதன் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துவந்தனர்.தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், 50 விழுக்காடு பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க அரசு அனுமதித்துள்ளது. அந்தவகையில் தமிழ்நாட்டில் நவம்பர் 10ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து திரையரங்கு உரிமையாளர்கள் பலரும் திரையரங்குகளை திறக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரும் இயக்குநருமான பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், திரைப்படத்தை வெளியிட வாங்கப்படும் விபிஎப் எனப்படும் விசுவல் பிரிண்ட் (மெய்நிகர் அச்சு கட்டணம்) கட்டணத்தை வாரம் ஒரு முறை செலுத்துவதற்கு பதில் ஒரே ஒரு முறை செலுத்த ஒப்புக் கொள்ள வேண்டும் என்கிற தங்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்பதால் புதிய திரைபடங்களை வெளியிடுவதில்லை என முடிவெடுத்திருப்பதாக குறிப் பிட்டுள்ளார்.இந்த நிலையில் அடுத்தகட்ட முடிவு எடுப்பது குறித்து நாளை அவசர ஆலோசனை நடத்தி முடிவெடுக்க உள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.