tamilnadu

img

மோடி தியானம் தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது; தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையருக்கு சிபிஎம் கடிதம்

கன்னியாகுமரியில் மோடி தியானம் மேற்கொள்ள இருப்பது தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது என்றும், தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் ஒளிபரப்பு செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு சிபிஎம் கடிதம் எழுதியுள்ளது.

இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

பிரதமர் மோடி தமிழ்நாட்டில் வந்து, கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை மீது தியானம் செய்ய போகிறார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்து 7 வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவிருக்கும் சூழலில் இந்த தியானம் நடக்கவுள்ளது.

வாக்குப்பதிவு நாளிலோ அல்லது பிரச்சாரம் முடிவுக்கு வந்த பின்னரோ நேரடியாகவோ மறைமுகமாகவோ வாக்கு கேட்க கூடாது. ஆனால், அந்த விதியை ஏய்த்து சமூக ஊடகங்களிலும், செய்தி சேனல்களிலும் நேரலை செய்து வாக்கு வேட்டை ஆடுவதே பிரதமர் மோடியின் திட்டம்.

சென்ற தேர்தலிலும் அவர் இதை செய்த நிலையில், மீண்டும் இதே உத்தியை கடைப்பிடிப்பதை தேர்தல் ஆணையம் அனுமதிக்கக் கூடாது. தனிப்பட்டு  தியானம் செய்தாலும் கூட அதை தொலைக்காட்சிகளிலோ, சமூக ஊடகங்களிலோ நேரலை செய்ய அனுமதிக்கக் கூடாது என மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

;