சென்னை, மே 18- சென்னை டவுட்டன் சந்திபில் இருந்து பட்டாளம் வரை உள்ள பெரம்பூர் பேரக்ஸ் ரோட்டில் மெட்ரோ ரயில் பணிக்காக வாகனங்கள் செல்ல சனிக்கிழமை (மே 18) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வடமலை தெரு முதல் அஷ்டபுஜம் ரோடு சந்திப்பு வரை இருவழிப் பாதையும் மூடப்பட்டுள்ளதால், டவுட்டனில் இருந்து செல்லும் வாகனங்கள் ஒரு வழிபாதையாக வடமலைத் தெரு, அருணாச்சலம் தெரு, வெங்கடேச பக்தன் தெரு வழியாக பெரம்பூர் நோக்கி செல்லலாம்
. பட்டாளம் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் அஷ்டபுஜம் ரோடு, ரங்கையா தெரு, ஏ.பி. ரோடு வழியாக டவுட்டன் சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த ஒரு வழிப்பாதையில் கனரக வாக னங்கள், சரக்கு வாகனங்கள், பேருந்து கள், செல்ல அனுமதி இல்லை. இந்த போக்கு வரத்து மாற்றம் அமலுக்கு வந்ததை தொடர்ந்து போக்குவரத்து காவல் துறை யினர் வாகனங்களை ஒழுங்குபடுத்தி அனுப்பி வைத்தனர்.