பட்டாபிராம் வரை மெட்ரோ
ரயில் சென்னை, பிப். 21- கோயம்பேடு முதல் பட்டாபிராம் (வெளிவட்டச் சாலை) வரை மெட்ரோ ரயில் போக்குவரத்து அமைப்பை நீட்டிப்பதன் பரிந்துரைக்கான விரிவான திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.கோபாலிடம், அரசு முதன்மை செயலாளரும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருமான மு.அ.சித் திக் சென்னை தலைமைச் செயலகத்தில் சமர்ப்பித் தார். அதன்படி மொத்த நீளம் 21.76 கி.மீ. உயர்த்தப்பட்ட நிலையங்களின் எண் ணிக்கை 19, மதிப்பிடப்பட்ட நிறைவு செலவு ரூ. 9,744 கோடி. என தெரிவிக்கப்பட் டுள்ளது.
நோயாளி தற்கொலை
சென்னை, பிப். 21- சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனையில் 5ஆவது மாடி யில் இருந்து கீழே குதித்து நோயாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல் துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் அலமாதி நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (48). இவர், வலது கழுத்து பகுதியில் கட்டி இருந்தது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்து வமனையில் உள் நோயா ளியாக கடந்த 14ஆம் தேதி சேர்ந்தார். மருத்துவமனை டவர் 1 கட்டடத்தின் 5ஆவது தளத் தில் உள்ள 158ஆவது வார்டில் சிகிச்சை பெற்று வந்தார். அந்த வார்டின் ஜன்னல் அருகே வியாழக் கிழமை இரவு சென்ற குமார், திடீரென அங்கிருந்து கீழே குதித்தார். இதில் பலத்தக் காய மடைந்த குமார், சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து சென்ற காவல் துறையினர் குமார் சடலத்தை மீட்டு பிரேத பரி சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.