tamilnadu

டிச. 30 வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை, டிச. 24- தமிழ்நாடு, புதுச்சேரியில் டிசம்பர் 30 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த ஒரு வாரத்திற்கான முன்னெச்சரிக் கையை வெளியிட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் பகுதி களில் சனிக்கிழமை நிலவிய வளி மண்டல கீழடுக்கு சுழற்சி அதே பகுதி களில் நிலவுவதாகவும், இதன் கார ணமாக வரும் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசா னது முதல் மிதமான மழை பெய்ய க்கூடும் என்றும், 27 மற்றும் 28 ஆகிய  தேதிகளில் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. 30ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ள தாக வானிலை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.