சென்னை:
கொரோனா காலத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட செவிலியர் களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டரில், “கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்கும் பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றிய அரசு செவிலியர்கள் 4000 பேருக்குத் தற்காலிக பணிக்காலம் நிறைவடைய உள்ளது.கொரோனா நோய்த் தொற்று அபாயம் முழுமையாக நீங்காத நிலையில், செவிலியர்களின் சேவைமருத்துவத்துறைக்கும் மக்களுக் கும் தேவை என்பதால் அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.