tamilnadu

மதுரை மற்றும் கடலூர் முக்கிய செய்திகள்

மதுரை எய்ம்ஸ்: 25 சிலாப்புகள் மட்டுமே பொருத்தம்

மதுரை, ஜன.21- மதுரை தோப்பூரில் 224.24 ஏக்கர் பரப்ப ளவில் ரூ.1264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. மருத்து வமனை அமைய உள்ள இடத்தில் ரூ.5  கோடி மதிப்பீட்டில் 5.50 கிலோமீட்டர்  சுற்றளவிற்கு சுற்றுச்சுவர் அமைக்கும்  பணிக்காக இரண்டு மாதத்திற்கு முன்பு  ஒப்பந்தம் வழங்கப்பட்டது. சுற்றுச்சுவர் எழுப்புவதற்காக 5.5 கி.மீ தூரத்திற்கு 6 அடி  நீளம் கொண்ட பள்ளங்கள் தோண்டப்பட்டு கான்கிரீட் கலவைகளால் நிரப்பப்பட்டுள்ளது. அதன் மேலே 10 அடி உயரம் கொண்ட கான்  கிரீட் சிலாப்புகள் பொருத்தப்பட உள்ளது.  தற்போது வரைக்கும் 25-க்கும் மேற்பட்ட  சிலாப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.

கிராம சபைக் கூட்டம்: ஆட்சியர் உத்தரவு

கடலூர், ஜன. 21- கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வரும் 26 ஆம் தேதி கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டுமென ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் வெ.அன்புச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:- கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜன.26 ஆம் தேதியன்று கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊராட்சி மன்றத் தலைவர்கள் கிராம சபைக் கூட்டத்தினை சிறப்பாக நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் திரளாக பங்கேற்று கிராமத்தின் வளர்ச்சிப்பணிகள், மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் குறித்து ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடத்த வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார். 

கடலூரில் அறிவியல் கண்காட்சி

கடலூர், ஜன. 21- கடலூரில் நடைபெற்ற வருவாய் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் 87 படைப்புகள் காட்சிபடுத்தப்பட்டன. மாணவர்களிடம் அறிவியல் மனப் பான்மையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் ‘இன்ஸ் பயர் அவார்ட்ஸ் மானக்’ என்ற அறிவியல் கண்காட்சியை நடத்தி வருகிறது. இதற்காக, ஒவ்வொரு பள்ளிகளிலிருந்தும் 5 விதமான கருத்தாக்கங்கள் பெறப்படுகின்றன. அதில்,  சிறந்த கருத்தாக்கங்கள் தேர்வு செய்யப் பட்டு அதற்கான காட்சியமைப்புகள் செய்வ தற்காக ஒவ்வொரு கருத்தாக்கத்திற்கும் தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதன்  படி, கடலூர் மாவட்டத்தில் தேர்ந்தெடுக் கப்பட்ட 87 மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டது. அதன்படி, அவர்கள் தங்களது எண் ணங்களை செயல்படுத்திடும் வகையில் கட லூர் வேணுகோபாலபுரத்திலுள்ள ஸ்ரீவரதம்  பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கண்காட்சி  அமைத்தனர். கண்காட்சியினை முதன்மைக்  கல்வி அலுவலர் கா.ரோஸ் நிர்மலா குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். பள்ளி தலை மையாசிரியர் எஸ்.லியோனர்டுஜானி முன்னிலை வகித்தார். காட்சிப் பொருட்களை  மத்திய அரசின் பிரதிநிதியாக கோமதி, மெரின்டயானா ஆகியோர் மதிப்பீடு செய்தனர். இதில் முதல் பரிசாக ஒரு படைப்பும், இரண்டாம் பரிசாக 2-ம், மூன்றாம் பரிசாக 3-ம்  தேர்ந்தெடுக்கப்படும். அவ்வாறு தேர்ந்தெ டுக்கப்படும் படைப்புகள் மாநில அளவிலான தேர்விற்காக பிப்ரவரியில் நடைபெறும் கண்காட்சியில் பங்கேற்கப்படும். அதன்பின்  னர் மண்டல அளவிலான தேர்விலும், தேசிய  அளவிலான தேர்விலும் பங்கேற்க அனு மதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

;