பொதுத்துறை தனியார்மயமாக்கலுக்கு எதிராக ஜன.8 அன்று மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதனையொட்டி காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் சென்னை பகுதி-1 சார்பில் திங்களன்று(ஜன.6) கோடம்பாக்கம் ரயிலடியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் சிஐடியு தலைவர் கே.கனகராஜ் பேசினார். தென்மண்டல காப்பீடு ஊழியர் சங்க துணைத் தலைவர் கே.சுவாமிநாதன், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க பொதுச்செயலாளர் எஸ்.ரமேஷ்குமார், மாதர் சங்கத்தலைவர் வெ.தனலட்சுமி உள்பட பலர் பேசினர்.
*************
ஜன.8 அன்று நடைபெறும் பொதுவேலைநிறுத்தத்தை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாப்பூர் பகுதி சார்பில் திங்களன்று (ஜன.6) ராஜா அண்ணாமலைபுரத்தில் கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் க.பீம்ராவ் பேசினார். தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சரஸ்வதி உள்ளிடோர் உடன் உள்ளனர். இக்கூட்டத்தில் திமுக, விசிக, மதிமுக, காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர்களும் பேசினர்.
*************
மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறும் ஜன.8 பொதுவேலைநிறுத்தத்தை விளக்கி சென்னை மற்றும் புறநகர் கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சூளைப்பள்ளத்தில் பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது. சிஐடியு மாநில துணைப்பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன் பேசினார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா,பாலகிருஷ்ணன், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் எம்.பாண்டியன், விருகம்பாக்கம் பகுதிச் செயலாளர் ஏ,நடராஜன் ஆகியோர் உடன் உள்ளனர்.
*************
ஜனவரி 8 பொதுவேலை நிறுத்தத்தை ஆதரித்து காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம் கோட்டம் 1ன் சார்பில் சென்னை எல்ஐசி தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோட்டம்1ன் தலைவர் ஜி.ஜெயராமன் தலைமையில் பொதுச்செயலாளர் எஸ்.ரமேஷ் குமார், தென்மண்டல பொதுச்செயலாளர் டி.செந்தில்குமார், துணைத்தலைவர் கே.எஸ்.சுவாமிநாதன், இணைச்செயலாளர் ஆர்.கே.கோபிநாத், கே.ஸ்ரீதர், எஸ்.சிவசுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்றனர்.
*************
மத்திய மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து ஜனவரி 8 அன்று நடைபெறும் வேலை நிறுத்தத்தை ஆதரித்து துறைமுகம் தொழிலாளர்கள் சார்பில் துறைமுகம்பிரதான வாயில் முன்பு செவ்வாயன்று (ஜன7)ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போர்ட் அண்டு டாக் எம்பிளாயீஸ் யுனியன் பொதுச்செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, நீர்வழிப்போக்குவரத்து தொழிலாளர் சங்க அகில இந்திய பொதுச்செயலாளர் டி.நரேந்திரன், ஐஎன்டியூசி பொதுச்செயலாளர் ஏ.பலராமன், எச்எம்எஸ் தலைவர் சிவக்குமார், ஏஐடியுசி தலைவர் லோகநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
*************
ஐனவரி-8 அகில இந்திய வேலை நிறுத்தத்தை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எழும்பூர் பகுதியில், போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து துண்டு பிரசுர விநியோக இயக்கம் நடை பெற்றது. கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா. பகுதிச் செயலாளர் கே.முருகன், மாவட்டக்குழு உறுப்பினர் வி.ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
*************
மின் துறையை பொதுத்துறையாக பாதுகாத்திடகோரியும் ஜனவரி 8 வேலை நிறுத்தத்தை விளக்கியும் வடசென்னை அனல் மின் நிலையம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்கங்க ளின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொமுச செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மண்டல செயலாளர் ரவிக்குமார், தொமுச செயலாளர் தேசிங் ,ஐஎன்டியூசி தலைவர்கள் தாமோதரன், இரவிசெல்வம் கணக்காயர் கள தொழிலாளர்கள் சங்கத்தின் ஆறுமுகம், சிஐடியு நிர்வாகிகள் ஜெயவேலு, வெங்கட்டய்யா, சுந்தரம், வெங்கடேசன் உள்பட பலர் பேசினர்.
*************