வியாழன், செப்டம்பர் 23, 2021

tamilnadu

img

பத்திரிகை அலுவலகத்திற்குள் புகுந்து பாமகவினர் மிரட்டல்

கோவையில் பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை, டிச. 27-  சென்னையில் டைம்ஸ்  ஆப் இந்தியா அலுவலகத் திற்குள் புகுந்து மிரட்டல் விடுத்த பாமகவினரை கண் டித்து கோவை மாவட்ட பத் திரிகையாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு வியாழ னன்று கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற மன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர் களின் வருகை பதிவு குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரி கையில் அண்மையில் செய்தி வெளியானது. இதில்  பாமக நாடாளுமன்ற உறுப் பினர் அன்புமணி ராமதாஸ் மிக குறைவான நாட்கள் மட்டும் வருகை தந்துள்ள தாக குறிப்பிட்டிருந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் சிலர் புதனன்று சென்னையிலுள்ள டைம்ஸ்  ஆப் இந்தியா அலுவலகத் திற்குள் புகுந்து மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில், நாடாளு மன்றம் செய்தி குறிப்பு வெளியிட்டதன் அடிப்படை யில் செய்தியை வெளியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா அலு வலகத்தில் பாமகவினர் அத்துமீறி நுழைந்து செய்தி யாளர்களுக்கு மிரட்டல் விடுத்ததை கண்டித்து  கோவை மாவட்ட அனைத்து பத்திரிகையாளர்கள் கண் டன ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். 

;