tamilnadu

img

வாகனங்களில் விஎல்டி கருவிகளை அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தியாளர்களிடம் மட்டும் வாங்க வலியுறுத்தல்....

சென்னை:
வாகனங்கள் எங்கு உள்ளன என்பதை அறியும் வி.எல்.டி கருவிகளை வாகன உற்பத்தியாளர் அல்லது அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து பெற்று வாகனங்களில் பொருத்தப்படவேண்டும் என்று உற்பத்தியாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சர்வதேச சாலை பாதுகாப்பு மற்றும் நிலையான போக்குவரத்து நிபுணர் டாக்டர் கமல் சோய்,தி சேப் கம்யூனிட்டி பவுண்டேஷன் தலைவர் ரஹாத்  ஆகியோர் இதனைத்  தெரிவித்தனர்.உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மாநிலத்தில் புதிய வாகனங்களில் வி.எல்.டி சாதனங்கள் பொருத்தப்பட்ட பிறகே செயல்படுவதற்கு அனுமதிக்கப்படவேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை ஆர்.டி.ஓ அலுவலகங்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.குறிப்பிட்ட 8 வி.எல்.டி.டி உற்பத்தியாளர்க ளுக்கு மட்டும் விதிகளை மீறி தமிழக அரசு வழங்கிய ஒப்புதல் உத்தரவுகள் திரும்பப் பெறப்பட்டதை வரவேற்பதாகவும் அவர்கள் கூறினர்.

;