வெள்ளி, பிப்ரவரி 26, 2021

tamilnadu

img

பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை

மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 
மத போதகர் பால் தினகரன் மீத வரி ஏய்ப்பு குறித்து புகார் எழுந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடரந்து இன்று காலை முதல் சென்னை அடையாறு, பாரிமுறை, கோவை காருண்யா பல்கலைக்கழகம் மற்றும் தமிழகம் முழுவதும் காருண்யா நிறுவனத்திற்கு சொந்தமான  28 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். காருண்யா பல்கலையில் இன்று காலை முதல் சுமார் 30 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பல்கலை வளாகத்திற்குள் வரும் வாகனங்கள் பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. செல்போன் எடுத்து செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு போடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 

;