tamilnadu

img

மின்வாரியத்தில் தனியார் மூலம் ஆட்கள் நிரப்புவது தற்காலிகம்தான்.... அமைச்சர் தங்கமணி மழுப்பல்....

சென்னை:
தமிழ்நாடு மின் வாரியத்தில் தற்போது 30 ஆயிரம் காலி பணியிடங்கள் இருக்கிறது. அதற்கு தனியார் மூலம் ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம் என அறிவித்த மின் வாரியம், நிதி ஒதுக்கீட்டையும் செய்திருக்கிறது.அதாவது, மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களில் உதவியாளர் மற்றும் வயர்மேன் பணியிடங்களுக்கு 20 பேரை தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் 3 ஆண்டுகளுக்கு ரூ.1,80,00,000 நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை 4 ஆண்டுகளாக கூட நீட்டித்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

மின்வாரியத்தின் ஆட்கள் தேர்வை தனியார் மயமாக்குவதற்கு  எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் சார்பில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், பல்வேறு பல தரப்பில் இருந்து கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.இந்த நிலையில், தனியார் மூலம் ஆட்களை தேர்வு செய்வது தற்காலிகமானது தான் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.மின்வாரியம் எந்த காரணத்தை கொண்டும் தனியார் மயம் ஆக்கப்படாது என்றும் மின்சார பணிகளில் தொய்வு ஏற்படாத வண்ணம் காக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கேங்மேன் பணி நியமன வழக்கு முடிந்தவுடன் தேர்வு செய்யப்பட்ட வர்களுக்கு பணி ஆணை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

;