tamilnadu

img

கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்பு அகற்றத்தால் பாதிப்பு:

சென்னை,ஜூன் 29- கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்பு அகற்றத்தால் பாதிக்கப்படுகின்ற, பல தலைமுறைகளாக வாழும் பழனி வாழ் ஏழைக்குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டமன்றக் கூட்டத்தொடரில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் கோரிக்கை விடுத்தார்.

ஜூன் 29 சனிக்கிழமையன்று நடந்த  சட்டமன்றக் கூட்டத்தொடர் நேர மில்லா நேரத்தில் ( ஜீரோ ஹவர்ஸ்) பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் கவனத்தை ஈர்க்கும் தகவலை கொண்டு வந்து பேசி னார்.

கூட்டத்தொடரில் அவர் பேசியதாவது:

பழனி தண்டாயுதபாணி கோயில் கிரிவலப் பாதையில் மேற்கொள்ளப் பட்டு வரும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளால் பல தலை முறைகளாக “அண்ணா செட்டி மடம்” எனும் பகுதியில் வாழும் 120- க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி யுள்ளது.

மேற்கண்ட பெரும் பாதிப்பிற்கு உள்ளாகும் அம்மக்களுக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தித் தருவதோடு, பட்டாதார நிலங்களில் உள்ள வியா பாரிகள், சன்னதி வீதி வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள் மற்றும் அப்பகுதியில் விளைநிலங்களுக்கு வேளாண் பணிகளுக்கும் செல்லும் உரிமையை பல தலைமுறைகளாய் பெற்றுள்ள விவசாய பெருங்குடி மக்களுக்கும், அப்பகுதியில் குடியி ருக்கும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களின் வாழ்வுரி மையை இழக்கும் சூழல் உருவாகி யுள்ளது. எனவே, அனைத்து தரப்பு  மக்களுக்கும் பல்வேறு திட்டங்களை உருவாக்கி பாதுகாத்து வரும் நம் அரசு பழனி வாழ் மக்களின் வாழ்வா தாரத்தை பாதுகாக்க வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.